ETV Bharat / city

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி - திருநாவுக்கரசர் வற்புறுத்தல் - காங்கிரஸ்

சென்னை: மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை விரைவாக அறிவிக்க தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வற்புறுத்தியுள்ளார்.

thirunavukarasar
thirunavukarasar
author img

By

Published : Jan 6, 2020, 1:36 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், ”உள்ளாட்சித் தேர்தல் தேதியை மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிக்க வேண்டும். தற்போது ஊரக உள்ளாட்சியில் 35 விழுக்காடு வாக்காளர்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 65 விழுக்காடு வாக்காளர்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.

முறைகேடுகள் நடைபெறாமலிருக்க மாநகராட்சி, நகராட்சித் தேர்தலில் மக்களே தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்படி, அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஒழுங்கீனம், குதிரை பேரம், தேர்தலை கொச்சைப்படுத்தும் வகையில் பணம் கொடுத்து தலைவர்கள் வரக்கூடிய சூழ்நிலையை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்.

மக்கள் விரும்பாத ஒன்றை திணிக்கும்போது அரசுக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பானது. குறிப்பாக, மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவருகிறார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டுமே தவிர, அவர்களின் மீது காவலர்களைக் கொண்டு வன்முறையை ஏவுவதோ, தடியடி நடத்துவதோ, கைதுசெய்து சிறையில் அடைப்பதோ ஜனநாயக நாட்டில் கண்டனத்திற்குரியது“ என்றார்.

குதிரை பேரத்தை அனைத்துக் கட்சிகளும் தடுக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

இதையும் படிங்க: எந்த ஆதாரமுமின்றி கைதுசெய்வதா? ப. சிதம்பரம் ஆதங்கம்

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்டமாக நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி ஆகியவற்றிற்கு தேர்தல் நடக்கவில்லை நகராட்சியில் மட்டும் 50% வாக்காளர்கள் இருக்கின்றனர். தற்போது உள்ளாட்சியில் 35 சதவீதம் வாக்காளர்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்துள்ளது மீதமுள்ள 65 சதவீதம் வாக்காளர்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்த என தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.

மாநகராட்சி,நகராட்சி தேர்தலில் மக்களே தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் படி, முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அரசு ஆணை பிறப்பித்தும், சட்டமன்றத்தில் நிறைவேற்றியும் தேர்தலை நடத்த அரசு முன் வரவேண்டும்.

ஒழுங்கீனம்,குதிரை பேரம், தேர்தலை கொச்சைப்படுத்தும் வகையில் பணம் கொடுத்து தலைவர்கள் வரக் கூடிய சூழ்நிலையை அரசாங்கம் தடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் வலியுறுத்த வேண்டும்,தேர்தல் விதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் மக்கள் விரும்பாத ஒன்றை திணிக்கும் போது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சகஜமான ஒன்று. ஜனநாயக நாட்டில் குறிப்பாக மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமே தவிர அவர்களின் மீது காவலர்களைக் கொண்டு வன்முறை ஏவுவதோ, தடியடி நடத்துவதோ, கைது செய்து சிறையில் அடைப்பதோ ஜனநாயக நாட்டில் கண்டனத்திற்குரியது. மாணவர் மேல் நடத்தப்படும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.