ETV Bharat / city

வெளிமாநிலத் தமிழர்கள் ஊர் திரும்ப ஒரு கோடி ரூபாய் நிதி - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி - காங்கிரஸ் கட்சி

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்று சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

alagiri
alagiri
author img

By

Published : May 4, 2020, 3:56 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே வேலையுமின்றி, உண்ண உணவுமின்றி உறங்க இடமுமின்றி, வரப்பே தலையணையாய், வைக்கோலே பஞ்சு மெத்தையாய் கடந்த 40 நாட்களாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி சீரழிகிறார்கள்.

அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப, மத்திய ரயில்வே அமைச்சகம் பயணச்செலவுக்கான பணத்தை அவர்களிடம் கேட்கிறது.

மாற்று உடையின்றி தவிக்கும் அவர்கள் பணத்திற்கு எங்கே செல்வார்கள் என்கிற சிறு உண்மைக்கூட மத்திய அரசுக்குப் புலப்படவில்லை. மாநில அரசோ, இன்னும் அதன் முடிவை தெரிவிக்கவில்லை. எனவே இந்த கையறு நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அதன் அறக்கட்டளையில் இருந்து ரூபாய் ஒரு கோடியை முதலமைச்சரிடம் வழங்குவது என முடிவு செய்திருக்கிறது.

இத்தொகையை வெளி மாநிலங்களில் சிக்கியிருக்கிற மக்களை தமிழகம் கொண்டு வருவதற்கு மட்டும் பயன்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலத் தமிழர்கள் ஊர் திரும்ப ஒரு கோடி நிதி - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை

இதையும் படிங்க: 'உணவிற்கே வழியில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.