சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் சௌந்தரபாண்டியன், பயிர்க்கடன் அனைவருக்கும் கொடுக்கப்படாமல், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே தரப்படுவதாகக் கூறினார். மேலும், வரும் ஆண்டிலிருந்து விவசாயிகளுக்கு வட்டியில்லா நகைக்கடன் வழங்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனும், கூட்டுறவு வங்கிகள் மூலம் நகைக்கடனும் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றன. 2019-20ஆம் ஆண்டில் மட்டுமே 15 லட்சத்து 93 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு இதுவரை 8500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'கரோனா; முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் மருத்துவம்...!' - விஜய பாஸ்கர் தகவல்