ETV Bharat / city

மாற்றுத்திறனாளிகள் நலன் காத்தோருக்கு விருதுகள்! - முதலமைச்சர் வழங்கினார்!

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2019-20 ஆம் ஆண்டிற்கான விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

day
day
author img

By

Published : Dec 21, 2020, 3:04 PM IST

ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுவதையொட்டி, சிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கும் தமிழ்நாடு அரசால் விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் இன்று, மாற்றுத் திறனாளிகளின் நலனிற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2019-20 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விதமாக, சிறந்த நிறுவனத்திற்கான விருதுகள், சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த ஆசிரியருக்கான விருதுகள், சிறந்த பணியாளர், சுய தொழில் புரிபவருக்கான விருதுகள், மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருதுகள், ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான விருதுகள் என 35 விருதாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

மாற்றுத்திறனாளிகள் நலன் காத்தோருக்கு விருதுகள்!

இவ்விருதுகளை பெறும் விருதாளர்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜயராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானிடாம் வர்கீஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சி.நாராயணசாமி நாயுடு பெயரில் விருது வழங்கி கௌரவிக்கும் அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.