செங்கல்பட்டு: ஆண்டுதோறும் ஏப்ரல் 24ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்று (ஏப். 24) தமிழ்நாட்டில், சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டார். அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!