ETV Bharat / city

பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சென்னை: தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்துநிதிநிலை அறிக்கை குறித்த அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துகளை இத்தொகுப்பில் காணலாம்.

பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள்

author img

By

Published : Mar 18, 2022, 10:38 PM IST

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. பத்தாண்டுக்கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் அதலபாதாளத்துக்குப் போனது. அதிலும், குறிப்பாக நிதித்துறை அடைந்த மிக மோசமான நிலைமை என்பது கவலைக்கிடமானது ஆகும்.

5.5 லட்சம் கோடி ரூபாயைக் கடனாக வைத்துவிட்டு நிதியைச் சூறையாடிய அரசாக, அதிமுக அரசு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகளைக் கடந்த பத்து மாத காலத்தில் நிறைவேற்றியுள்ளோம். இந்த நிதிநிலை அறிக்கை மாற்றத்துக்கான தொடக்கம் மட்டுமல்ல, மேன்மையடையும் தமிழ்நாடு என்பதற்கான தொடக்கமாகவே நான் கருதுகிறேன். பத்தாண்டுக்காலச் சரிவைச் சரிசெய்வது மட்டுமல்ல, அடுத்த 25 ஆண்டுக்கால உயர்வை உணர்த்துவதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு பதவி ஏற்றநாளிலிருந்து சாதனைகளைப் படைத்து வருகிறது. இதனால், தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோட்டு வருகிறது. இதை உறுதி செய்கிற வகையில் தமிழ்நாட்டின் 2022 -23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. கடந்த கால அரசுகள் செய்யத் தவறியதை தற்போது தமிழ்நாடு அரசு செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்

தேர்தலுக்கு முன்பு திமுகவினர் அளித்த வாக்குறுதிகள் குறித்தோ, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகள் இல்லாத வெற்று அறிவிப்பாகத் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. மேலும், இந்தாண்டு அரசின் கடன் சுமை மேலும் உயர்ந்து ரூ. 6.5 லட்சம் கோடி அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. மொத்தத்தில், நேரடியாக மக்களுக்குப் பயன் தரக்கூடிய திட்டங்கள் இல்லாத நிதிநிலை அறிக்கையாகத் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ்

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

பெண்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படிப்பதை உறுதி செய்யும் வகையில், கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதே திட்டம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையிலும் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசுப்பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், இது மிகவும் சரியான நடவடிக்கையாகும்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலித்தல், தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்காகச் சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

2014ஆம் ஆண்டிலிருந்து வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வந்த நிலையில், திமுக அரசின் செயல்திறன் மிகுந்த நிதி நிர்வாகத்தால் நடப்பு ஆண்டில் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என்பது பாராட்டுக்குரியது.

மேலும் நிதிப் பற்றாக்குறை 4.61 விழுக்காடு அளவிலிருந்து 3.80 விழுக்காடாகக் குறைந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் வழங்கப்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுபடிக்காக ரூ. 1000 கோடி, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடிக்கு ரூ.500 கோடி அளிக்கப்பட்டு இருப்பதும், சொன்னதைச் செய்யும் திமுக அரசு என்பதற்குச் சான்றாகும்.

மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், "தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் தனியார்ப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்குப் பாடநூல் கட்டணமில்லாமல் வழங்கப்படும்; பெண்கள் கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்தும் வகையில் உதவித் தொகை உள்ளிட்ட நல்ல அறிவிப்புகள் கொண்டுள்ளதை வரவேற்கிறோம்" எனத் தெரிவித்தார்.

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாநில தலைவர் ஜான்ஸிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர், "இன்று சமர்ப்பிக்கப்பட்ட 2022-23 நிதிநிலை அறிக்கை மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரிய ஏமாற்றத்தையும் சிறிய வரவேற்பையும் உடையதாக உள்ளது. குறிப்பாக, சட்ட உரிமைகளை முன்னெடுக்கத் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் முயலாதது வெளிப்படுகிறது. ரூ.838 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட ரூ.25 கோடி மட்டுமே உயர்வு" என்றனர்.

இதையும் படிங்க:வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல்... 24ஆம் தேதி வரை சட்டபேரவைக் கூட்டம் - சபாநாயகர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.