கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்று முடிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பேரவைத் தலைவர் தனபால். அப்போது அவர், ”நாளை காலை மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்பு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஹெச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெறும்.
எட்டாம் தேதி அன்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். ஒன்பதாம் தேதி ஆண்டிற்கான இரண்டாவது நிதிநிலை அறிக்கை, பேரவைக்கு அளிக்கப்படும். பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சரின் பதிலுரை இடம்பெறும்.
நாளை காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சட்டப்பேரவை கூடும். மற்ற நாள்களில் வழக்கமான நேரத்தில் சட்டப்பேரவை செயல்படும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள தனிநபர் தீர்மானம் ஆய்வில் உள்ளது“ என்று கூறினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு