ETV Bharat / city

ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்று நிறைவு! - tamilnadu assembly news

பிப்ரவரி 2ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

tamilnadu assembly ended today
tamilnadu assembly ended today
author img

By

Published : Feb 5, 2021, 10:05 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகச் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளியேறினர். சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்ட நிறைவேற்றப்பட்ட முன்மொழியப்பட்ட மசோதாக்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

  • ஆன்லைன் சூதாட்டம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • கூட்டுறவுச் சங்க முறைகேடுகளை விரைந்து தீர்வு காண விசாரணை கால அளவு மூன்று மாதமாக குறைத்து மசோதா நிறைவேற்றம்
  • விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது
  • பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களின் தண்டனையை 7 ஆண்டுகளிலிருந்து பத்தாண்டுகளாக அதிகப்படுத்தும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகியவற்றை அரசுக் கல்வி நிறுவனங்களாகக் கருதி அதனை மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது
  • தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது
  • இந்த மசோதா எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஒரு மனதாக நிறைவேறியது. இந்த சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இச்சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகச் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.