ETV Bharat / city

செயற்கை இழையால் ஆன மதிப்பெண் சான்றிதழ்கள் - கிழியவோ, சேதமோ ஆகாது! - சட்டப்பேரவை

சென்னை: பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் இனி கிழிக்க இயலாத, நீரில் சேதம் அடையாத வகையில் செயற்கை இழையால் ஆன மதிப்பெண் சான்றிதழ்களாக வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படுமென சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

education
education
author img

By

Published : Mar 12, 2020, 7:38 PM IST

சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில்,

1. 1,570 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்த 1.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

2. சிறைவாசிகளுக்காக மூன்றாம் வகுப்பிற்கு நிகரான சம நிலை கல்வித்திட்டம் 20.33 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

3. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் இனி, கிழிக்க இயலாத, நீரில் சேதம் அடையாத வகையில் செயற்கை இழையால் ஆன மதிப்பெண் சான்றிதழ்களாக வழங்க முடிவு. இதற்காக 13.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

4. புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட நூல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலி வடிவில் மாற்றி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்காக 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. சென்னை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் 9 லட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகம் அமைக்கப்படும்.

6. பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயருடன், பெற்றோர் பெயரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறச் செய்யப்படும்.

7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்லும்போது, அரசு அருங்காட்சியகங்களை பார்வையிட பெரிதும் ஊக்குவிக்கப்படும்.

இதையும் படிங்க: மக்கள் தொகை குறைவால் மாணவர் சேர்க்கை குறைவு - செங்கோட்டையன் புதிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.