தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க காவல் துறையினர், மாநகராட்சி, சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் இணைந்து, தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக, தீயணைப்புத் துறையினர் ’ஸ்கை லிஃப்ட்’ இயந்திரம் கொண்டு அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி அலுவலகம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் தீயணைப்புத் துறையினர் பலர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 30 தீயணைப்பு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் 28 வயது தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர் நேற்று குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளார். ஆனால் கரோனா பரிசோதனை முடித்த பின்பு வேலைக்கு வருமாறு உயர் அலுவலர்கள் உத்தரவிட்டதால், தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இவர் பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மருத்துவர்கள் இவரை தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்