ETV Bharat / city

ஆசிரியர் டூ அரசியல் : காமராஜர் மறைந்தபோது எடுத்த சபதத்தை ரஜினியை வைத்து நிறைவேற்றுவாரா? - தமிழருவி மணியன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamilaruvi maniyan and his political background
ஆசிரியர் டூ அரசியல் : காமராஜர் மறைந்தபோது எடுத்த சபதத்தை ரஜினியை வைத்து நிறைவேற்றுவாரா?
author img

By

Published : Dec 5, 2020, 5:14 PM IST

அரசியல் கட்சி தொடங்கப்போவதாக முதல்முறையாக தெளிவான நிலைப்பாடு ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிச.4) அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தனது கட்சி 2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும், டிசம்பர் 31ஆம் தேதியன்று அது குறித்த முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழருவி மணியனை கட்சியின் மேற்பார்வையாளராக ரஜினிகாந்த் நியமித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தமிழருவி மணியன் யார்? என்ற கேள்வி இந்தியா முழுவதுமுள்ள பொதுமக்களிடமும், அவரது ரசிகர்களிடமும் எழுந்துள்ளது.

எழுத்தாளர், பேச்சாளர், காந்தியவாதி என தமிழ்நாடு மக்களால் பரவலாக அறியப்பட்டுள்ள தமிழருவி மணியனுக்கு, புதிதாக தொடங்கப்படவுள்ள அரசியல் கட்சியில் தலைவருக்கு நிகரான மேற்பார்வையாளர் எனும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்ட காரணம் என்ன ? இதுவரை எந்தக் கட்சியிலும் இல்லாத மேற்பார்வையாளர் என்ற பொறுப்பை தமிழருவி மணியனுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாக ? தமிழருவி மணியனின் காந்தி மக்கள் கட்சியின் மாநாட்டில் தன் ரசிகர்கள் கலந்துகொள்ள வேண்டும் என ரஜினிகாந்த்தே சொல்லும் அளவுக்கு தமிழருவி மணியனுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் ? என்பதுதான் இப்போது விவாதமாக மாறியுள்ளது.

யார் இந்த தமிழருவி மணியன் ?

வரலாற்று மாணவரான மணியன் வரலாற்றுப் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும், கல்வியியல் பிரிவில் இளங்கலைப் பட்டமும் பெற்றவராவார்.

சென்னை சூளைப் பகுதியில் அமைந்துள்ள இந்து ஒற்றுமைக் குழு மேல்நிலை பள்ளியில் வரலாற்று ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவர் சிலகாலம் வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் இளங்கலை (பி.எல்.,) சட்டம் முடித்தவர், தன் வாதங்களை நீதிமன்றங்களில் மட்டுமல்ல மக்கள் மன்றங்களிலும் முன்வைத்த மணியனுக்கு ’தமிழ்’ அருவி போல கொட்டியது.

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்ட இவர், அவரது தலைமையில் கீழ் இயங்கிய அகில இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியில் 1966ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அரசியல் முரண்பாடுகளால் காமராஜர் தலைமையில் தோன்றிய சிண்டிகேட் காங்கிரஸ் (நிறுவன காங்கிரஸ்) கட்சியிலும், அவரது தொண்டாராகவே மணியன் இருந்தார். அப்போதெல்லாம், காமராஜரின் கூட்டங்களில் பேசும் ஒரே ஸ்டார் பேச்சாளரான மணியனின் பேச்சைக் கேட்ட காமராஜர் தமிழருவி என்று பாராட்டினார். அன்று முதல் இன்றுவரை இவர் தமிழருவி மணியன் என அழைக்கப்படுகிறார். 1975ஆம் ஆண்டு காமராசர் மறைந்தப் பின்னர் ஜனதா கட்சியில் இணைந்தார்.

பின்னர், 1988 ஆம் ஆண்டில் சமூக நீதிக் காவலர் என புகழப்படும் வி.பி.சிங் தோற்றுவித்த ஜனதா தளத்தில் சேர்ந்தார். ஜனதா கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவந்த இராமகிருட்டிண கேக்டே லோக்சக்தி என்னும் கட்சியை 1997ஆம் ஆண்டில் தொடங்கிய பொழுது அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

ஜி.கே.மூப்பனார் நிறுவிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் கொஞ்ச காலம் செயல்பட்டுவந்த மணியன், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் ஆலோசனையை ஏற்று 2002ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஏறத்தாழ 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக பதவி வகித்துவந்தவரை 2006 ஆம் ஆண்டில் திட்டக் கமிஷன் குழு உறுப்பினராக ஆக்கினார், திமுக தலைவர் மு.கருணாநிதி. தமிழீழ பிரச்னையில் அப்போதைய ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைக் கண்டித்து தனது பதவிகளை மணியன் ராஜினாமா செய்தார்.

2009 மே மாதம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடத்திய ‘முள்வேலியை அறுத்தெறிவோம்’ மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சில காலம் இயக்குநர் மணிவண்ணன் போன்றோருடன் இணைந்து செயல்பட்டார்.

2009ஆம் ஆண்டு, அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளில், ‘காந்திய மக்கள் இயக்கம்’ எனும் இயக்கத்தைத் தொடங்கினார். பின்னர் 2014 ஆம் ஆண்டில் அவ்வியக்கத்தை 2014ல் அரசியல் கட்சியாக மாற்றி, அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்துப் பரப்புரை செய்தார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது காந்திய மக்கள் கட்சி. அந்தத் தேர்தலில், 2000 வாக்குகளுக்குக் கீழ் வாங்கினால் பொதுவாழ்க்கையைவிட்டு விலகுவதாக அறிவித்தார். முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லாததால், சில காலம் பொது வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்தார்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் காந்தி மக்கள் கட்சி சார்பில் ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா?’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தி ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தொடர்ச்சியாக தொலைக்காட்சி விவாதங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் ரஜினிக்கு ஆதரவாகப் பேசிவந்தார்.

ரஜினி தன்னைச் சந்திக்க விரும்பிய செய்தி அறிந்ததும், 2017ஆம் ஆண்டு ரஜினியை நேரில் சந்தித்தார். தமிழருவி மணியனின் கூட்டங்களில் பெருந்திரளாக தனது ரசிகர்களை கலந்துகொள்ள வேண்டும் என்று கூறும் அளவிற்கு ரஜினியோடு நெருக்கம் கொண்டவராக மாறிப்போனார். ரஜினியின் அரசியல் ஆலோசகராகவே பார்க்கப்பட்டுவந்த அவர், தற்போது புதிய கட்சியின் மேற்பார்வையாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள அரசியல் கட்சிக்கு இவர்தான் அமைப்பு ரீதியிலான வடிவம் கொடுக்கும் பணியை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளில் அவரது ஆலோசனை முக்கிய பங்கு வகிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவர, ‘போருக்குத் தயாராக இருங்கள்!’ என்ற ரஜினிகாந்த் கூறியதாக இருக்கலாம். ஆனால், அதன் உள்ளார்ந்த குரல் தமிழருவி மணியனனுடையது என ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது.

அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால்... “1967ஆம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட அன்று, தியாகராய நகரில் இருக்கிற திருமலைப் பிள்ளை வீதியில், கண்ணீரும் கம்பலையுமாகக் கூடிக்கிடந்த மக்களுக்கு நடுவே சென்று அவருடைய காலடியில் விழுந்து அரசியலைத் தொடங்கியவன் நான்.

இன்று ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஐம்பது ஆண்டுகளில் நான் நெஞ்சுக்குள் நேர்ந்துகொண்ட ஒரே தவம் என்ன தெரியுமா... பெருந்தலைவர் காமராஜர் மரணத்தைச் சந்திக்கிற இறுதி கணம் வரையிலும், அவர் சொன்னது தி.மு.க அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் தமிழகத்து அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே. பெருந்தலைவரின் உண்மையான தொண்டனாக அவரின் கனவை நிறைவேற்ற வேண்டிய சபதம் என்னிடம் இருக்கிறது''... அந்த சபதம் நிறைவேறுமா ?

பொறுத்திருந்து பார்க்கலாம்...

இதையும் படிங்க : கடற்படை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பைக் பேரணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.