சென்னை தரமணியில் தமிழ் ஆராய்ச்சி கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. அதை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், சமூக மேம்பாட்டு ஆய்வு குழுவும் இணைந்து நடத்தியது.
இதில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கலை, சமூக மேம்பாட்டு ஆய்வு குறித்தும் உரை நிகழ்த்தப்பட்டது. கருத்தரங்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழ் உலக ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, மாலை 5 மணியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.