ETV Bharat / city

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று(பிப்.17) வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
author img

By

Published : Feb 17, 2022, 2:15 PM IST

சென்னை: கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை(பிப்.18) தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

19.02.2022 முதல் 20.02.2022: தென் தமிழ்நாடு மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

21.02.202: கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ) ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இதையும் படிங்க: ஜனரஞ்சக சினிமா - ஒரு பார்வை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.