ETV Bharat / city

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர் நல சம்மேளனம் கண்டனம் - Petrol,diesel price hike

மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சிலிண்டர்களின் விலையைக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர் நல சம்மேளன சங்கத் தலைவர் ரவிராஜா தெரிவித்துள்ளார்.

டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவிராஜா

author img

By

Published : Jul 5, 2021, 8:05 PM IST

Updated : Jul 5, 2021, 9:22 PM IST

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர் நல சம்மேளனம் கண்டனம் தெரிவித்து, அச்சங்கத்தின் தலைவர் ரவிராஜா தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: 'மத்திய அரசு விண்ணைத்தொடும் அளவிற்கு ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும்.

லாரி ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று 6 மாத கால இ.எம்.ஐ தவணை நீட்டிப்பு வழங்க வேண்டும். ஓட்டுநர்கள் சாலை வரி கட்டுவதற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களும் விலை உயரும் அபாயம்
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிடும். கேஸ் சிலிண்டரின் விலை தற்போது 850 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

எனவே, அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலை ஏற்றம் அடைந்துள்ளதால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல், சிலிண்டர்களின் விலையைக் குறைக்க வேண்டும்.
முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் பெட்ரோல் விலை நான்கு ரூபாயும், டீசல் விலை மூன்று ரூபாயுமாக குறைக்க வேண்டும்.

சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சுங்கச்சாவடிகளையும் நீக்க வேண்டுமென முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களாகியும் சவுடு, மணல், கிராவல் குவாரிகளுக்கு கொள்கை முடிவு எடுத்து அனுமதி வழங்கவில்லை.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கவனத்தில் கொண்டு குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்' என்றார்.

Last Updated : Jul 5, 2021, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.