ETV Bharat / city

கள்ளக்குறிச்சி விவகாரம்: 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

author img

By

Published : Jul 19, 2022, 7:38 AM IST

அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன்? என விளக்கம் கேட்டு 987 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ்
பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், அவரின் மரணத்திற்கு நீதி வேண்டி கடந்த 17ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் வன்முறையாக மாறி தனியார் பள்ளி வளாகம் அடித்து நொறுக்கப்பட்டது. அந்த கலவரத்தை தொடர்ந்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என நேற்று முன்தினம் (ஜூலை 17) அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தங்களின் அனுமதியில்லாமல் பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் (ஜூலை 18) மூடப்பட்ட மற்றும் செயல்பட்ட தனியார் பள்ளிகளின் விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டார்.

திருநெல்வேலி, கரூர், அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் செயல்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 335 பள்ளிகளில், 987 பள்ளிகள் மட்டுமே செயல்படவில்லை. அந்த வகையில் தமிழ்நாட்டில் 91 சதவீதம் பள்ளிகள் இயங்கியுள்ளன, 9 சதவீதம் மட்டுமே இயங்கவில்லை .

இந்தப் பள்ளிகள் அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் எனவும், பள்ளிகளின் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்புச்சட்டம் தேவை - தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.