ETV Bharat / city

பள்ளிகளில் ஆயத்தப் பணிகளை உடனே மேற்கொள்ளவும் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆயத்தப் பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tamil Nadu School Education Commissioner
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை
author img

By

Published : Jan 28, 2022, 9:33 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “கரோனா பெருந்தொற்று காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் 31.01.2022 வரை இரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் (SOP) பின்பற்றி, 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை

எனவே, அனைத்து பள்ளிகளும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் (SOP) பின்பற்றி பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் செயல்பட அனைத்து விதமான ஆயத்தப் பணிகளையும் உடன் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தேர்தல் பரப்புரைக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை - திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.