சென்னை : சென்னை மழை, வெள்ளம் மீட்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது, ஆனால் இவ்விவகாரத்தில் பாஜக தேவையில்லாத அரசியலை செய்கிறது எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பண்டித ஜவஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர் ஜவஹர்லால் நேரு, இட ஒதுக்கீட்டிற்கான முதல் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தவர். அதுமட்டுமின்றி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ரயில்வே, எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களை உருவாக்கியவர். தற்போது நேரு உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை பாஜக அரசு விற்பனை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
இதையும் படிங்க : பாஜகவின் தவறான கருத்து தமிழ்நாட்டில் எடுபடாது - கே.எஸ். அழகிரி விமர்சனம்