ETV Bharat / city

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 200 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் - prisoners writing 10th public exam

தமிழ்நாடு சிறைகளில் இந்த ஆண்டு 9901 சிறைவாசிகள் கல்வி பயின்று வருவதாகவும், 10ஆம் பொதுத்தேர்வை 217 சிறைவாசிகள் எழுதுவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சிறைத்துறை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு , prisoners,
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 200 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள்- சிறைத்துறை அறிவிப்பு
author img

By

Published : May 7, 2022, 12:56 PM IST

தமிழ்நாடு: 2021-2022ம் கல்வி ஆண்டில் பல்வேறு சிறைகளை சேர்ந்த 16 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 217 சிறைவாசிகள் மே 6 ஆம் தேதி துவங்கிய 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் கோரிக்கையின்படி, சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுதிடும் வகையில், மாநில பள்ளிக் கல்வித்துறையால் 8 மத்திய சிறைகள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-2022ம் ஆண்டில் 340 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 9,901 சிறைவாசிகள் பல்வேறு பாடப்பிரிவுகளை தொடர்ந்து பயின்று வருகின்றனர். 4833 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் அடிப்படை ஆயத்தப் படிப்பையும், 3928 பேர் அடிப்படைக் கல்வி (7ஆம் வகுப்பு வரை) 585 பேர் பல்வேறு இளங்கலை, முதுகலை பட்டபடிப்புகள் மற்றும் பட்டயப்படிப்பு / சான்றிதழ் படிப்புகளை பயின்று வருகின்றனர். 585 சிறைவாசிகள் 8, 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை பயின்று, அரசு செலவில் பொதுத் தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

சிறைத்துறை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு , prisoners,
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 200 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள்- சிறைத்துறை அறிவிப்பு.

கல்விக்கு முக்கியத்துவம்: சிறைவாசிகள் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், ஏழை மற்றும் சமூகத்தின் அடித்தள மட்டத்திலிருந்து வந்து இருப்பதால் சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறை சிறைவாசிகளுக்கு கல்வி வழங்க முன்னுரிமை அளித்து வருகிறது.

சிறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில், கல்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சிறைவாசிகளை தவறான பாதைக்கு வழிநடத்தும் கடுங் குற்றவாளிகளிடமிருந்து சிறைவாசிகளை பாதுகாக்க கல்வியறிவு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் அணிவகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.