தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு (ஜூலை 19) நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதில், ஜூலை 12 முதல் 19ஆம் தேதி வரையுள்ள கட்டுப்பாடுகள்:
- புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
- உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழிதடங்கள் தவிர விமானப் போக்குவரத்துக்கு தடை
- திரையரங்குகள், மதுக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
- பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளி, கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்கும் தடை