திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்பமனு விநியோகம், தாக்கல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று காலை முதல் தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் சேகர்பாபுவும் மேற்கு மாவட்டத்தில் ஜெ.அன்பழகனும் தெற்கு மாவட்டத்தில் மா. சுப்பிரமணியனும் விருப்பமனு விநியோகத்தை தொடங்கிவைத்தனர்.
திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கீழ்கண்ட தொகையினை செலுத்தி விருப்ப மனு அளிக்க தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன் கட்டண விவரம் வருமாறு
:
மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் -ரூ. 50,000
மாமன்ற உறுப்பினர் - ரூ.10,000
நகர்மன்றத் தலைவர் - ரூ. 25,000
நகர்மன்ற உறுப்பினர் - ரூ. 5000
பேரூராட்சித் தலைவர் - ரூ. 10,000
பேரூராட்சி மன்ற உறுப்பினர் - ரூ. 2500
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் - ரூ. 10,000
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் - ரூ. 5000.
இதில் ஆதிதிராவிடர், பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டணத் தொகையில் பாதி மட்டும் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பமான படிவத்தை 10 ரூபாய் செலுத்தி மாவட்ட தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.
இந்த விருப்ப மனு விநியோகம் வருகின்ற 20ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறவிருப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனிமொழிக்கு எதிரான வழக்கை தூத்துக்குடி வாக்காளர் நடத்தலாம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!