ETV Bharat / city

ஆன்லைன் ரம்மிக்கு தடை: மக்களிடம் கருத்து கேட்கும் தமிழ்நாடு அரசு - government seeks public opinion

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது, அதனை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் தமிழ்நாடு அரசு

author img

By

Published : Aug 7, 2022, 2:09 PM IST

சென்னை: தமிழ்நாடு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இன்று (ஆக. 7) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடிய தீமைகள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. பல்வேறு நாடுகளில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தியோ அல்லது முற்றிலுமாக தடை செய்தோ சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், குறிப்பாக பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கண்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது / ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், தங்களுடைய கருத்துகளை homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் ஆக. 12ஆம் தேதிவரை தெரிவிக்கலாம். ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த கருத்துகளை நேரடியாக பகிர விரும்பும் நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட அலுவலரை நேரில் சந்தித்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்க, ஆக. 9 அன்று மாலை 5.00 மணிக்குள் தங்களது வேண்டுகோளை மேற்கூறிய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

கருத்துக் கேட்புக் கூட்டம் ஆக.11 அன்று மாலை 4.00 மணி முதல் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கு பெறலாம்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை கண்டுகளிக்க குவிந்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.