ETV Bharat / city

டாப் கிளாஸ் தரத்துடன் குறைவான விலையில் 'வலிமை சிமெண்ட்' அறிமுகம் - தரமான சிமெண்ட்

குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் தமிழ்நாடு அரசின் "வலிமை சிமெண்ட்" முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

cement, வலிமை சிமெண்ட், valimai cement, tamil nadu government, tn govt valimai cement, அரசு வலிமை சிமெண்ட், குறைந்த விலை சிமெண்ட், low cost cement, top quality cement in tamil nadu, தரமான சிமெண்ட், டான்செம்
வலிமை சிமெண்ட்
author img

By

Published : Oct 23, 2021, 5:16 PM IST

சென்னை: சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், "தனியார் சிமெண்ட்டின் விலை 2021 மார்ச் மாதம் 420 ரூபாய் முதல் 450 ரூபாய் ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, ஜூன் மாத முதல் வாரம் மூட்டை ஒன்றுக்கு 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டுவந்தது. மேலும், ஆலோசனை மேற்கொண்டு சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தங்களுடைய சிமெண்ட் சில்லரை விற்பனை விலையினை மூட்டை ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைத்து, 15.06.2021 முதல் விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வினை மேலும் குறைக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக சிமெண்ட் விலையானது 420 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டது.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் (டான்செம்) சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 3,67,677 மெட்ரிக் டன் டான்செம் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது மார்ச் 2021 முதல் செப்படம்பர் 2021 வரை இரு மடங்குக்கும் மேலாக 7,68,233 மெ.டன் என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, டான்செம் சிமெண்ட் 350 ரூபாய் முதல் 360 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தனியார் சிமெண்டின் விலையினை ஒப்பிடுகையில், 90 ரூபாய் குறைந்த விலையில் தரமான டான்செம் சிமெண்ட் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வருடங்களில் தமிழ்நாட்டின் சிமெண்ட் விற்பனையில் டான்செமின் விற்பனைப் பங்கு மிகக்குறைவாகவே இருந்தது. சென்ற வருடம் 3.5 விழுக்காடு ஆக இருந்த டான்செம்மின் விற்பனை பங்கானது நடப்பாண்டில் 7.35 விழுக்காடு உயர்ந்துள்ளது. மேலும், டான்செம் விற்பனையினை அதிகரிக்க தொடந்து நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், ஓரிரு வாரங்களில், தமிழ்நாடு அரசின் டான்செம் நிறுவனம் "வலிமை" என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் மூலம், மாதம் ஒன்றுக்கு சுமார் 90,000 மெட்ரிக் டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் "அரசு" சிமெண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனுடன், குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் "வலிமை சிமெண்ட்" முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெட்ரிக் டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிமெண்ட்-ன் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப. வீரபாண்டியன் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.