சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர்த்தில் 2,812 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 11,154 பேர் குணமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 33 ஆயிரத்து 966ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 48 ஆயிரத்து 419ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 904ஆகவும் அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 546 பேருக்கும், கோயம்புத்தூரில் 523 பேருக்கும், செங்கல்பட்டில் 238 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு நான்காயிரத்திற்கும் கீழ் குறைந்துவருகிறது. இந்த நிலையில் மூன்றாயிரமாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்ப் பெண்ணை மணமுடிக்கும் மேக்ஸ்வெல்: தமிழில் அழைப்பிதழ்