சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர்த்தில் 3,086 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14,051 பேர் குணமடைந்துள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 157ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 37ஆயிரத்து 265ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 887ஆகவும் அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 590 பேருக்கும், கோயம்புத்தூரில் 569 பேருக்கும், செங்கல்பட்டில் 261 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு நான்காயிரத்திற்கும் கீழ் குறைந்துவருகிறது. இந்த நிலையில் மூன்றாயிரமாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஐந்தாயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு