சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 949 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 79 ஆயிரத்து 698 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 949 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 226 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 34 லட்சத்து 44 ஆயிரத்து 929 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 ஆயிரத்து 172 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 91 ஆயிரத்து 11 என உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் இரண்டு பேர், அரசு மருத்துவமனையில் ஒருவர் என மூன்று பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக சென்னையில் 222 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 136 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 92 நபர்களுக்கும், ஈரோட்டில் 47 நபர்களுக்கும், திருப்பூரில் 40 நபர்களுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கரோனா பரவல் வீகிதம் 1.3 என்ற அளவில் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு