சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,252 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,768 பேர் குணமடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர்.
அதன்படி மொத்தபாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 41 ஆயிரத்து 783ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 80 ஆயிரத்து 49ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 962ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 82 ஆயிரத்து 272 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தாமாக 6 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 927பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய கரோனா பதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 285 பேருக்கும், கோவையில் 214 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 1,310 பேருக்கு கரோனா பாதிப்பு