ETV Bharat / city

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்து மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கபட்டு 2 நிமிடம் மொன அஞ்சலி செலுத்தபட்டது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம்

author img

By

Published : Oct 17, 2022, 11:36 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று (அக். 17) சபாநாயகர் அப்பாவு தலைமையில் திருக்குறள் உரையுடன் தொடங்கியது. அதன்பின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களான இருந்து மறைந்த அ.மு. அமீது இப்ராகிம், கே.கே. வீரப்பன், ஏ.எம். இராஜா, எஸ்.பி. பச்சையப்பன், எஸ். புருஷோத்தமன், பெ.சு. திருவேங்கடம், தே. ஜனார்த்தனன், பே. தர்மலிங்கம், எம்.ஏ. ஹக்கீம், கோவை தங்கம் ஆகியோருக்கு அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ராமநாதபுரம் இளைய மன்னர் இராஜ.நாகேந்திர குமரன் சேதுபதி, விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், ஐக்கிய இராஜ்ஜியத்தின் இராணி இரண்டாம் எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சாமிவேலு, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன், உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங், முன்னாள் பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா, ஆகியோர் மறைவு குறித்து பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பேரவையின் இன்றைய அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக சட்டவிதியை மாசுபடாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம் - ஓ. பன்னீர்செல்வம் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.