ETV Bharat / city

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகள் உடனுக்குடன் - தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகள் உடனுக்குடன்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
author img

By

Published : Feb 4, 2021, 9:37 AM IST

Updated : Feb 4, 2021, 1:43 PM IST

13:41 February 04

நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று திமுக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது, ஆனால் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அமைச்சரவையில் அதிமுக முடிவெடுத்தது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

13:17 February 04

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரை பதில் இல்லை, 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

13:03 February 04

7 பேர் விடுதலை தொடர்பாக ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு, 7 பேர் விடுதலை குறித்து திமுகவினர் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர்  - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

13:02 February 04

தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள், ஊராட்சிகள் திருத்த சட்டமுன்வடிவு தீர்மானம் நிறைவேறியது.

12:57 February 04

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவு அறிமுகம் செய்ய அனுமதி கோரினார் செல்லூர் ராஜூ, பின்னர் சட்டப்பேரவையில் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டறவு சங்கங்களின் திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

10:58 February 04

2,000 மினி கிளினிக் திறப்பு - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு நடத்தி, 2000 மினி கிளினிக்குகளைத் திறந்துவைத்து, மருத்துவ மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பாராட்டுத் தெரிவித்துள்ளார். வருகின்ற 2021ஆம் ஆண்டிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்று பேசியுள்ளார்.

10:42 February 04

மலைவாழ் மக்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு முழுவதும் 3,973  மலைவாழ் மக்கள் வாழும் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணித்தவர்களைத் தேர்தலில் மக்கள் புறக்கணித்து பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், "மழைக்குச் சொந்தக்காரர், ராசிக்காரர் முதலமைச்சர்" என எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து பேசினார்.

10:39 February 04

முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு செல்லூர் ராஜு புகழாரம்

உக்கிர எதிர்ப்பை எல்லாம் ஒற்றைச் சிரிப்பால் ஓடவிட்டு, வெற்றி ஒன்றையே குறிக்கோளாய் வைத்துச் செயல்பட்டுவருபவர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகப் பல்வேறு வரலாற்றுச் சாதனைத் திட்டங்களை உருவாக்கி, கரோனா காலத்திலும் அதிக முதலீடுகளைப் பெற்றுத்தந்து, இந்தியாவிலேயே  நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டியுள்ளார்.

10:17 February 04

'நிரந்தர முதலமைச்சர் நீங்கள்தான்?' - செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 52.17 லட்சம் மடிக்கணினி வழங்கப்பட்டதாகவும், இதற்காக 34,181.72 கோடி ரூபாய் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப்படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாராட்டு தெரிவித்த செங்கோட்டையன் நாளை முதலமைச்சரும் நீங்கள்தான், நிரந்தர முதலமைச்சரும் நீங்கள்தான் எனப் பாராட்டியுள்ளார். 

10:09 February 04

சட்டப்பேரவையின் 3ஆம் நாள் கூட்டம் தொடங்கியது 

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அறிவிப்பை இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின்கீழ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

09:13 February 04

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. மூன்றாம் நாளான இன்று தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடைவிதிக்கும் மசோதாவை முதலமைச்சர் இன்று தாக்கல்செய்கிறார். ஏற்கனவே அவசரச் சட்டம் மூலம் தடைசெய்யப்பட்ட நிலையில் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தடை மசோதாவை தாக்கல்செய்கிறார். 

Last Updated : Feb 4, 2021, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.