ETV Bharat / city

'வேளாண்துறையில் ஒரு புரட்சி; எல்லா தரப்பு விவசாயிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பட்ஜெட்' - எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

அனைத்து தரப்பு விவசாயிகளின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது எனவும்; வேளாண்விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் அறிக்கையாகத் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை 2022-23 அறிக்கை அமைந்துள்ளது என்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
author img

By

Published : Mar 24, 2022, 5:35 PM IST

சென்னை தலைமைச்செயலக வளாகத்திலுள்ள சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் இறுதி நாளான (மார்ச் 24) இன்று, அனைத்து தரப்பு விவசாயிகளின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாகவும் வேளாண் விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் அறிக்கையாக வேளாண் நிதிநிலை 2022-23 அறிக்கை அமைந்துள்ளது என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பதிலுரையின் பேசியபோது அவர், 'முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளைஞரை போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது. கொளத்தூர் தொகுதி மக்களை முதலமைச்சர் தாங்கி வருகிறார். வரும் இரண்டு ஆண்டுகளில் கரும்பு பயிர் செய்யும் தொழில், லாபம் உள்ள தொழிலாக மாற்றப்படும்.

விவசாயிகளுக்கு ரூ.3,000 நிதி: பத்தாண்டுகளில் வேளாண்துறையில் ஒரு புரட்சியைத் தமிழ்நாடு அரசு உருவாக்கும். அனைத்து தனியார் சர்க்கரை ஆலைக்கான நிலுவைத்தொகைகள் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது. உழவர் நல வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.3,000 நிதி வழங்கப்பட்டு வருகிறது.

வாழை மற்றும் மஞ்சளுக்கு பயிரினைப் பாதுகாக்கும் வகையில் தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலம் பயிர்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு விடிவுதரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.