ETV Bharat / city

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்! - tamil nadu 6 districts rain

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
author img

By

Published : May 2, 2019, 5:42 PM IST

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 38 மற்றும் 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.

இதுவரை, விழுப்புரம் மாவட்டத்தில் 4 செ.மீ, பாண்டிச்சேரி, கடலூர் மாவட்டத்தில் தலா 2 செ.மீ மழையும், திண்டிவனத்தில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தமிழகத்தை தாக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், அது தற்போது திசைமாறி ஒடிசாவை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் மழை பெய்து, தண்ணீர் பஞ்சம் நீங்கும் என கூறப்பட்ட நிலையில் அது பொய்த்துப்போனது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இருப்பினும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் கோடைமழை அவ்வப்போது பெய்து வருகிறது. 

பானி புயல், ஆந்திராவில் இருந்து சற்று துாரத்தில், கடல் வழியே சுழன்று, நாளை, ஒடிசாவில் கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கோபால்புர் மற்றும் சந்த்பாலி இடையே, நாளை நண்பகலில், புயல், கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயல், மிக அதி தீவிர புயல் என்பதால், மிகவும் மோசமான விளைவுகளையும், சேதத்தையும் ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்துள்ளன. பொதுமக்கள், எப்போதும் இல்லாத வகையில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்க, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புயல், தற்போதைய பலத்துடன், தமிழகத்தில் கரை கடந்திருந்தால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், புயல் திசை மாறியதால், மோசமான பாதிப்பில் இருந்து, தமிழகம் தப்பியுள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச  வெப்பநிலை முறையே 38 மற்றும் 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.

இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 4 செ.மீ , பாண்டிச்சேரி ,கடலூர் மாவட்டத்தில் தலா 2 செ.மீ  மழையும் ,திண்டிவனத்தில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது .

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.