ETV Bharat / city

கோயில்களில் திருக்குறள் வகுப்புகள் - தங்கம் தென்னரசு அதிரடி

கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

tamil development and information minister

author img

By

Published : Aug 31, 2021, 6:52 PM IST

சென்னை: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு இன்று 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் கீழ்வருமாறு

  1. தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இதற்கான சிறப்பு நிதியாக ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  2. அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டு, இதற்கென தொடர் செலவினம் ஆக ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
  3. பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழிக் இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், திறனறித் தேர்வு நடத்தி ஆண்டுதோறும் 1,500 பேர் தெரிவு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக திங்கள்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும்
  4. திருக்குறள் முற்றோதல் செய்து பரிசுத் தொகையை வழங்காமல் நிலுவையில் உள்ள 219 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பரிசு வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்று உச்சவரம்பு நீக்கப்பட்டு பரிசுத் தொகை உயர்த்தப்படும்.
  5. தமிழ் அறிஞர்களான சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கர வள்ளிநாயகம், புலவர் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத் தொகை வழங்கப்படும்.
  6. சங்க இலக்கிய வாழ்வியலை ஓவியங்களாகவும், எளிய விளக்கத்துடன் காகித மேஜை புத்தகங்களாகவும் வெளியிட ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்
  7. திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்
  8. தமிழறிஞர்கள் எழுத்தாளர்களின் பிறந்தநாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்திட ரூபாய் 15 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்
  9. புகழ்பெற்ற தலைவர்கள் தமிழறிஞர்களின் ஒலி/ஒளிப் பொழிவுகள் ஆவணம் ஆக்கப்படும் இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்
  10. சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு நூல்களாக அச்சிட்டு குறைந்த விலையில் வெளியிட ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்
  11. தமிழில் பெயர் எழுதும்போது முன்னேற்றத்தையும், தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்
  12. வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுக்கள், தமிழிலும் அச்சிட்டு வழங்கப்படும். குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படவும் வழிமுறைகள் உருவாக்கப்படும்
  13. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பெறப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு சுருக்கம் மற்றும் ஆய்வு தொகுப்புகள் தமிழில் தொகுத்து தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வாயிலாக இணையத்தில் வெளியிடப்படும்
  14. பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்களை ஒலி நூல்களாக வெளியிட ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்
  15. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் கீழ் புதிய கலைச் சொற்கள் உருவாக்கம், இணைய வழியில் அறிமுகம் என ஆண்டுதோறும் ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்
  16. தொல்காப்பியம் முதல் முத்தொள்ளாயிரம் வரையிலான 41 செவ்வியல் நூல்கள் எளிதாகவும், ஒரே இடத்தில் தொகுப்பாகவும் கிடைக்கப் பெற வழிவகை செய்யப்படும். இதற்கு ஆண்டுதோறும் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்
  17. நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று, மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு பாராட்டு சான்றிதழ் வழங்குவதற்கு, ஆண்டுதோறும் 81 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படும்
  18. தமிழைப் பிற மொழியினருக்கு கற்பிக்கும் வகையில், திராவிட மொழிகள் உள்பட பிற மொழிகளில் பாடநூல்களும் பன்மொழி அகராதி தமிழ் கற்பிக்கும் பொருள் குறுஞ்செயலிகள் உருவாக்கப்படும்
  19. சுருக்கு பையின் சொற்கள் தமிழ் மின்நூல்கள் அரசு தலங்களில் உள்கட்டமைப்புகள் போன்றவை படைப்பாக்கப் பொது உரிமத்தின் வெளியிடப்படும்
  20. ஆட்சி சொல் அகராதி திருத்திய பதிப்பு மற்றும் அரசு துறைகளில் புதிய கலைச்சொற்கள் தொகுத்து வெளியிடப்படும்

இதையும் படிங்க: வருவாய் துறை சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.