ETV Bharat / city

காலமானார் ஜனங்களின் கலைஞன் விவேக்!

author img

By

Published : Apr 17, 2021, 6:10 AM IST

Updated : Apr 17, 2021, 1:27 PM IST

காலமானார் ஜனங்களின் கலைஞன் விவேக்!
காலமானார் ஜனங்களின் கலைஞன் விவேக்!

06:06 April 17

சென்னை: நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59.

சின்னக் கலைவாணர் எனப் போற்றப்படும் ஜனங்களின் கலைஞன் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவ முறை அளிக்கப்பட்டது.  

இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது இறப்புக்குத் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) அவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் விவேக் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் நேற்று விளக்க அளித்தனர். அதில், "காலை 11 மணியளவில் சுயநினைவு இல்லாமல் விவேக் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.

கரோனா தடுப்பூசிக்கும் விவேக்கிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலிக்கும் சம்பந்தம் இல்லை. கரோனா தடுப்பூசியால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை" எனத் தெரிவித்திருந்தது.

மதுரை மண்ணின் மைந்தன்

1961 நவம்பர் 19 அன்று அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக மதுரையில் பிறந்தார் நடிகர் விவேக். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி - இலுப்பையூரணி. 

இவர் திரைத்துறையில் 1987ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக் கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளிவந்த 'தாராள பிரபு' படத்தில் நடித்தார்.

புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

இவரது நகைச்சுவை கையூட்டு, மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றைத் தாக்குவதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும், ஜனங்களின் கலைஞன் என்றும் அழைக்கின்றனர்.  

விவேக் பெற்ற விருதுகள்

மத்திய அரசின் 2009ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

ஃபிலிம்பேர் விருதுகள்

  • ரன் - 2002
  • சாமி - 2003
  • பேரழகன் - 2004
  • சிவாஜி - 2007

தமிழ்நாடு அரசின் விருதுகள்  

  • ரன் - 2002
  • பார்த்திபன் கனவு - 2003

Last Updated : Apr 17, 2021, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.