கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பல்வேறு கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல்.10) தாம்பரம் நகராட்சி சார்பில், தாம்பரம் சந்தைப் பகுதியில் உள்ள நடைபாதை கடைகள், காய்கறி, பூ, மீன் மாக்கெட் ஆகியவை நாளை (ஏப்ரல் 11) முதல் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
தாம்பரம் சந்தை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் - Corona virus update at chennai
சென்னை: தாம்பரத்தில் காய்கறி, பூ, பழக்கடைகள் நாளை முதல் மூடப்படும் என தாம்பரம் நகராட்சி உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
Tambaram
கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பல்வேறு கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல்.10) தாம்பரம் நகராட்சி சார்பில், தாம்பரம் சந்தைப் பகுதியில் உள்ள நடைபாதை கடைகள், காய்கறி, பூ, மீன் மாக்கெட் ஆகியவை நாளை (ஏப்ரல் 11) முதல் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அப்போது அதிகமாக கூட்டம் கூடும் காய்கறிக் கடைகள், மீன் கடைகள், பூ, பழக்கடைகள் ஆகிய கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி தரப்படும். அதுவரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட மாட்டது. இவை தவிர பிற கடைகளும், நடைபாதை வியாபாரிகளும் கடைகளைத் திறந்து கொள்ளலாம் என ஆணையர் சித்ரா தெரிவித்தார்.
மேலும் காய்கறி, பழம், பூக்கடைகளை தள்ளுவண்டிகளுக்கு மாற்றி நடமாடும் கடைகளாக செயல்பட எந்தத் தடையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.