தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துkகொண்டேவருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களில் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், அதிக கூட்டத்தை தவிர்த்தல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் சானிடோரியம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள நகை கடையில் முன்பக்கம் உள்ள ஷட்டர் மூடப்பட்டு பின்பக்கம் வழியாக நகைகள் விற்பனை நடந்துள்ளது. இதுகுறித்து தாம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடையின் வளாகத்துக்குள் 50க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியை மும்முரமாக நகைகளை வாங்கி கொண்டிருந்தனர். உடனே கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததாக கூறி அலுவலர்கள் அந்த நகை கடைக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்.