காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பணிபுரிந்துவந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஒருவர் இறந்ததாக கிடைத்த தகவலையடுத்து, அவர் குடிபோதையில் உயிரிழந்தாரா? இல்லை, யாராவது அடித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி ஷெமா, இரண்டு குழந்தைகள் ஆந்திர மாநிலத்தில் வசித்து வருவதாகவும், அவர் மட்டும் பணிக்காக காசிமேடு பல்லவர் நகரில் தனியாக வசித்துவருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. அவரது மாமியார் எண்ணூர் பகுதியில் வசித்துவருகிறார். இதையடுத்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து காவலர்கள் இறந்த கூலித்தொழிலாளியின் உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 'காவலர் கொடூர கொலை - மூன்று பேருக்கு வலைவீச்சு!'