அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 29 வரை ஆன்லைன் மூலம் நடைபெற்றன. இந்த தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்பட ஒரு லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணி நேரம் என 40 வினாக்களில் 30 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். இறுதிப் பருவத்தில் மாணவர்கள், சுமார் 3 லட்சத்து 91 ஆயிரத்து 397 தேர்வு தாள்களை எழுதியிருந்தனர்.
ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் முறைக்கேட்டில் ஈடுபட்டால் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் பல மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மக்கள் கூடும் இடங்களை அடையாளம் காணவேண்டும்' - சௌமியா சுவாமிநாதன்