பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ஆர்யா, மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவரான ஜான் சார்லஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2016ஆம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் கதை எழுதி, கதையை இயக்குநர் கே.வி. ஆனந்திடம் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்காலத்தில் இந்தக் கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக கே.வி.ஆனந்த் கூறியதாகவும், இந்த நிலையில் ‘சரவெடி’ கதையை ’காப்பான்’ என்ற பெயரில் கே.வி. ஆனந்த் படமாக்கியுள்ளார் என்றும், எனவே காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், படத்தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பில் கூறப்பட்ட ’சரவெடி’ படத்தின் கதையும், ’காப்பான்’ படத்தின் கதையும் வேறு வேறு என்னும் வாதத்தை ஏற்றுக்கொண்டு, வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்துள்ளார்.
அவ்வழக்கில், தன்னுடைய விளக்கத்தைக் கேட்காமல் உத்தரவிட்டுள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஜான் சார்லஸ் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு இன்று வந்த போது, லைகா நிறுவனம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் ’காப்பான்’ படம் வெளியிடுவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
இதையும் படிங்க
சாவதற்கு சம்பளம் வாங்குபவர்கள் 'காப்பான்' - கே.வி. ஆனந்த்
விஜய், கார்த்திக்கு சவால் விடும் தமன்னா!
actor kamal in rajahmundry prison: ராஜமுந்திரி மத்திய சிறையில் கமல்ஹாசன் - வைரல் வீடியோ!