ETV Bharat / city

திமுகவை வீழ்த்த எம்.ஜி.ஆருக்கு துணை நின்றவர்கள் ரஜினியை ஆதரிப்பார்கள் - சைதை துரைசாமி - நடிகர் ரஜினிகாந்த்திற்கு சைதை துரைசாமி ஆதரவு

சென்னை : எம்.ஜி.ஆருக்கு துணை நின்று, ஆதரவளித்து திமுகவை வீழ்த்திய அனைவரும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவு தருவார்கள் என பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.

Supporters of MGR who toppled DMK will support Rajini - Saithai  Duraisamy
திமுகவை வீழ்த்த எம்.ஜி.ஆருக்கு துணை நின்றவர்கள் ரஜினியை ஆதரிப்பார்கள் - சைதை துரைசாமி
author img

By

Published : Dec 3, 2020, 10:21 PM IST

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக முதல்முறையாக தெளிவான நிலைப்பாடு ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கருத்து தெரிவித்த பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ‘புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் தொடரட்டும் ரஜினியின் பணி’ என்று கூறி முதல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடக்கம், வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார்.

இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம் இது. 1972ஆம் ஆண்டில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கொண்டுவந்த மாற்றத்தை போல அமையக்கூடிய திருப்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் வருடம் மார்ச் 5ஆம் தேதி வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலை திறப்பு விழாவிலே அவர், ‘என்னால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல் நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியருக்கான ஆட்சியை, நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கான ஆட்சியை தர முடியும்’ என்பதை ஆழ்ந்த நம்பிக்கையுடன் உறுதிபடச் சொல்லி இருந்தார்.

நல்ல திறமையான ஆசோகர்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அத்தகைய ஒரு ஆட்சியைக் கொடுப்பேன் என்பதையும் சொல்லியிருந்தார். ஏழைகளுக்கான சாமானிய மக்களுக்கான புரட்சித் தலைவரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்வந்திருப்பதை வரவேற்கிறேன்.

Supporters of MGR who toppled DMK will support Rajini - Saithai  Duraisamy
திமுகவை வீழ்த்த எம்.ஜி.ஆருக்கு துணை நின்றவர்கள் ரஜினியை ஆதரிப்பார்கள் - சைதை துரைசாமி

அவருக்கு எம்.ஜி.ஆருக்கு துணை நின்று ஆதரவளித்து திமுகவை வீழ்த்திய அனைவரும் ஆதரவு தருவார்கள் என்பது திண்ணம்.

கரோனா நோய் தொற்றுக் காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்று முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.

‘தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. நிச்சயம் அது நடக்கும்’ என்ற ரஜினியின் நம்பிக்கையான வார்த்தையை வரவேற்று அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : திமுக, பாஜக, இப்ப ரஜினி - அர்ஜுனமூர்த்தி பின்னணி?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.