ETV Bharat / city

பொதுத்தேர்வு எழுதாத 4.5 சதவீத மாணவர்களுக்கு, துணைத் தேர்வு எழுத நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை துணைத் தேர்வில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை
author img

By

Published : Jun 2, 2022, 9:53 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை துணைத் தேர்வில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்ளாமல் தவிர்த்து விட்டனர் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும், சில மாணவர்கள் பள்ளிக்கு வராமல் தொடர்ந்து வேலைக்கு சென்றிருந்தாலும் அவர்களின் பெயர் தேர்வு எழுதுவதற்கான மாணவர்களின் பட்டியலில் பள்ளிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா?என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், 12ஆம் வகுப்பிற்கு மே5 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற பொதுத் தேர்வினை எழுதுவதற்கு 84,4,808 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் மொழித்தேர்வு எழுத 43,562 மாணவர்கள் பங்கேற்கவில்லை. 11 ஆம் தேதி 14,036 மாணவர்கள் பங்கேற்கவில்லை. சரியாக 3.8 % மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவில்லை.

அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பத்தாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற தேரவினை எழுதுவதற்கு 892740 பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு முதல் நாளில் நடைபெற்ற மொழிப்பாட தேர்வினை 43,562 மாணவர்கள் எழுதவில்லை. 27ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் 18,476 மாணவர்கள் பங்கேற்காமல் இருந்துள்ளனர். 11 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களின் 4.8 % மாணவர்கள் சராசரியாக தேர்வினை எழுதாமல் இருந்துள்ளனர்.

10 ஆம் வகுப்பு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 9,74,321 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 45,020 பேர் முதல் நாளில் மொழித்தாள் தேர்வு எழுதாமல் இருந்தனர். 4.6 % பேர் தேர்வினை எழுதாமல் இருந்துள்ளனர். 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வு எண்ணிக்கை அடிப்படையில் 27 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் தேர்வினை எழுத வேண்டும்.

அவ்வாறு தினசரி நடைபெற்ற தேர்விற்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை பாடவரியாக சேர்த்து ஒட்டுமொத்தமாக பங்கேற்காதவர்கள் எண்ணிக்கை 6,49,467 ஆக உள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன.

கரோனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரணமாக முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில், பெரும்பாலும் முதல் நாள் தேர்வினை எழுத வராத மாணவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத வராமல் இருந்துள்ளனர். சில மாணவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு எழுத வராமல் இருந்துள்ளனர்.

பள்ளிக்கல்வி மாணவர்கள் இடைநிற்றலை இன்றி முடிக்க வேண்டும் என்பதற்காகவும் உயர்கல்வியை தொடர்ந்து பயில வேண்டும் என அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அச்சத்தால் தேர்வு எழுத வராத மாணவர்களை துணைத் தேர்வு எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு அளித்துள்ள உத்தரவில், பொதுத்தேர்வு 2022ஆம் ஆண்டில் பொது தேர்வில் பங்கேற்காத மாணவ- மாணவியர் எண்ணிக்கை குறித்த ஆய்வு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவ, மாணவியரை 'உடனடித் தேர்வில்' கலந்து கொள்ளச் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்கான 'செயல்திட்டத்தை' அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தயார் செய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச கராத்தே போட்டியில் 12 தங்கப் பதக்கம் வென்று தமிழக மாணவர்கள் அசத்தல்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.