ETV Bharat / city

திமிறி எழுந்த திமுக! - dmk won

சென்னை: கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத திமுக, இந்தமுறை அசுர பலத்துடன் திமிறி எழுந்து அதிமுகவிடமிருந்த அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

dmk
author img

By

Published : May 23, 2019, 6:03 PM IST

Updated : May 23, 2019, 11:18 PM IST

2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16ஆவது மக்களவைத் தேர்தலில் திமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போன நிலையில், அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தமுறை திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சித் தலைமையை ஏற்ற ஸ்டாலின், நன்கு திட்டமிட்டு களத்தில் இறங்கினார்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பாலான ஊர்களில் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்களே இந்த கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களை நேரடியாக சந்தித்துப் பேசி வந்தனர். அந்த வகையில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை பல மாதங்களுக்கு முன்பே தொடங்கியது திமுக.

அதோடு தமிழக மக்களுக்கு ஆளும் அதிமுக மீதும், அதிமுக கூட்டணி வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி மீதும் ஏற்பட்ட அதிருப்தியும் திமுகவுக்கு சாதகமாக அமைந்தது. இவற்றின் காரணமாகவும் தற்போது அதிமுக வைத்திருந்த அதே எண்ணிக்கையிலான (37) தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதேபோல், புதுச்சேரியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனை எதிர்த்துப் போட்டியிட்ட கனிமொழி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தயாநிதி மாறன், நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட ஆ.ராசா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர். பாலு உள்ளிட்ட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வெற்றி பெற்றனர். தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், பாதிக்கு மேல் திமுக வேட்பாளர் டாக்டர். செந்தில்குமார் முன்னிலை வகித்தது திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகும் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து இறுதியில் பாமகவின் கோட்டையான தருமபுரியையும் திமுகவே கைப்பற்றியது கவனிக்கத்தக்கது.

திமிறி எழுந்த திமுக

அதேபோல் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் கரூர் தொகுதியில் மக்களவைத் துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான தம்பிதுரையை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோதிமணி, கன்னியாகுமரி தொகுதியில் பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்ட ஹெச். வசந்தகுமார், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரும் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வெற்றி பெற்றனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு இடதுசாரி கட்சிகளும் தாங்கள் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது.திமுக கூட்டணி சார்பாக சிதம்பரத்தில் களம் கண்ட விசிக தலைவர் திருமாவளவன் முதலில் பின்னடைவை சந்தித்தாலும் அதன்பிறகு முன்னிலை வகித்துவருகிறார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு அசுர பலம் கொடுக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 20 இடங்களில் வெற்றி பெற்றால் முதலமைச்சர் நாற்காலியை கைப்பற்றும் வாய்ப்பும் ஸ்டாலினுக்கு இருந்தது. ஆனால் 20 தொகுதிகளுக்குக் குறைவாகவே திமுக வெற்றி பெற்றாலும், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தால் தற்போதே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகலாம்.

எது எப்படியோ, கருணாநிதியின் வழிகாட்டுதல் இல்லாமலும், திமுகவின் அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந்த மு.க. அழகிரியின் ஆதரவு இல்லாமலும், திட்டமிட்டு களப்பணி செய்து தேர்தலை எதிர்கொண்ட ஸ்டாலின் இதே உத்வேகத்தோடு அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலையும் எதிர்கொண்டால் தமிழகத்தில் உதய சூரியன் ஆட்சி அமைவது உறுதியாகிவிடும்.

Intro:Body:

TOPIF: திமிறி எழுந்த திமுக!

CAPTION: கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத திமுக, இந்தமுறை அசுர பலத்துடன் திமிறி எழுந்து அதிமுகவிடமிருந்த அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

PKG Voice Over

2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16ஆவது மக்களவைத் தேர்தலில் திமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போன நிலையில், அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆனால் இந்தமுறை திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சித் தலைமையை ஏற்ற ஸ்டாலின், நன்கு திட்டமிட்டு களத்தில் இறங்கினார்.  

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பாலான ஊர்களில் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.  திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்களே இந்த கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களை நேரடியாக சந்தித்துப் பேசி வந்தனர்.  

அந்த வகையில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை பல மாதங்களுக்கு முன்பே தொடங்கியது திமுக.  அதோடு தமிழக மக்களுக்கு ஆளும் அதிமுக மீதும், அதிமுக கூட்டணி வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி மீதும் ஏற்பட்ட அதிருப்தியும் திமுகவுக்கு சாதகமாக அமைந்தது.  இவற்றின் காரணமாகவும் தற்போது அதிமுக வைத்திருந்த அதே எண்ணிக்கையிலான (37) தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.  இதேபோல், புதுச்சேரியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் பாஜக மாநி

லத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனை எதிர்த்துப் போட்டியிட்ட கனிமொழி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த கனிமொழி சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

 இதேபோல், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தயாநிதி மாறன், நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட அ. ராசா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர். பாலு உள்ளிட்ட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வெற்றி பெற்றனர்.    

தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணிக்கட்சியான பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த நிலையில், பாதிக்கு மேல் திமுக வேட்பாளர் டாக்டர். செந்தில்குமார் முன்னிலை வகித்தது திருப்பு முனையாக அமைந்தது.  அதன்பிறகும் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து இறுதியில் பாமகவின் கோட்டையான தருமபுரியையும் திமுகவே கைப்பற்றியது கவனிக்கத் தக்கது. 

அதேபோல் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் கரூர் தொகுதியில் மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான தம்பிதுரையை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோதிமணி, கன்னியாகுமரி தொகுதியில் பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்ட ஹெச். வசந்தகுமார், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரும் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வெற்றி பெற்றனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு இடதுசாரி கட்சிகளும் தாங்கள் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது.

திமிறி எழு என்ற முழக்கத்தை முன் வைத்து அரசியல் பிரவேசம் செய்து, திமுக கூட்டணி சார்பாக சிதம்பரத்தில் களம்கண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிமுகவின் சந்திரசேகரை வெல்ல முடியாமல் போனதுதான் எதிர்பாராத திருப்பம்.

இதேபோல், 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் 20 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால் முதலமைச்சர் நாற்காலியை கைப்பற்றும் வாய்ப்பும் இருந்தது.  20 தொகுதிகளுக்குக் குறைவாகவே வெற்றி பெற்றாலும்,  அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தால் தற்போதே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகலாம்.

அப்படிஇல்லையென்றாலும், கூட்டணி  தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதல் இல்லாமலும், திமுகவின் அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந்த மு.க. அழகிரியின் ஆதரவு இல்லாமலும், திட்டமிட்டு களப்பணி செய்து தேர்தலை எதிர்கொண்ட ஸ்டாலின் இதே உத்வேகத்தோடு அடுத்த  சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டால் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிடும். 

Conclusion:
Last Updated : May 23, 2019, 11:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.