காங்கிரஸ் சார்பில் சுஜித் குடும்பத்திற்கு ஆறுதல் கூற திருச்சி செல்வதற்கு முன்னதாக, காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரனருமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சுஜித் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை என்பது வருத்தத்தை தருவதோடு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.
இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தல்!
நீதிமன்றம் ஆழ்துளைக் கிணறு மூடப்படுவது குறித்து வழிகாட்டுதல் பல குறிபிட்டுள்ளபோது அதை மத்திய-மாநில அரசுகள் இனிமேலாவது பின்பற்ற வேண்டும். மேலும் மீட்புப் பணிக்கு தேவையான தொழில் நுட்பத்தையும் அதிகரிக்க வேண்டும். சுஜித்தின் குடும்பத்திற்கு மாநில-மத்திய அரசுகள் கணிசமான இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் என்றார்.
ப.சிதம்பரம் குறித்து பேசுகையில்,
ப.சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. அவரை பழிவாங்கும் எண்ணத்தில் ஜாமீன் வழங்க தாமதிப்பதை ஏற்க முடியாது. அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஷ்மீர் விவகாரம்...
காஷ்மீரில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை அனுமதிக்கும்போது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: மனதை தேற்றிக்கொள்கிறேன்... நீ கடவுளின் பிள்ளை! - விஜயபாஸ்கர் உருக்கம்!
மேலும் பார்க்க: 'இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள்' - வைரமுத்து உருக்கம்