ETV Bharat / city

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு - Chennai High Court

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Apr 27, 2021, 6:07 PM IST

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி, செங்குறிச்சி சுங்கச்சாவடிகளுக்கு இடையில் உரிய விதிகளைப் பின்பற்றித் தடுப்புகளை ஏற்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த சுரேஷ் மணிவண்ணன் என்பவர் தாக்கல்செய்த பொதுநல மனுவில், "சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி-செங்குறிச்சி சுங்கச்சாவடிகளுக்கு இடையில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், வாகனங்கள் அதிவேகமாக வருவதைத் தடுக்கும்வகையில் இந்தத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள போதும், அதன் மீது பிரதிபலிப்பு ஒட்டுவில்லைகள் எதுவும் ஒட்டப்படவில்லை. 100 மீட்டர் தொலைவுக்கு முன்பு தடுப்புகள் உள்ளதாக எச்சரிக்கை செய்யும் பதாகைகள் இல்லை.

தேசிய நெடுஞ்சாலைகள் சட்ட விதிகளின்படி, தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளை அமைக்கக் கூடாது. எச்சரிக்கைப் பதாகைகளும், பிரதிபலிப்பு ஒட்டுவில்லைகளும் இல்லாததால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தத் தடுப்புகளுக்கு 100 மீட்டர் தொலைவில், முன் தடுப்புகள் குறித்த எச்சரிக்கை பதாகைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், பிரதிபலிப்பு ஒட்டுவில்லைகள் ஒட்ட உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு, காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.