சென்னை: கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் அனைத்து மண்டல இணை இயக்குநர்கள், கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "உயர் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில், கல்லூரிகளில் வாரத்தில் ஆறு நாள்கள் நேரடியாக வகுப்புகளை நடப்புப் பருவத்திற்கு நடத்த வேண்டும்.
மாணவர்களுக்கான எழுத்துத்தேர்வு அட்டவணை மாற்றம்செய்யப்பட்டு, ஜனவரி 20ஆம் தேதிமுதல் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் தேர்வினை எளிதில் எழுதும் வகையில் மாதிரித் தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைக் களையும் வகையிலும், மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழுமையாகப் புரியும்படியும் நடத்தி முடிக்க வேண்டும்.
கல்லூரிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பதையும், வகுப்பறை போதுமான அளவில் இல்லை என்ற புகார் எழாத வகையில் கல்லூரிகளின் முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:Maanaadu Release: தடைகள் தகர்ந்தது ; திட்டமிட்டபடி திரைக்கு வரும் 'மாநாடு'