CM Stalin: சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளரும், குறு சிறு தொழில் துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நூற்றாண்டு விழாவில் சுப. வீரபாண்டியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
செயல் தலைவர் பதவியை உருவாக்கியவர் க. அன்பழகன்
இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது விழா மேடையில் உரையாற்றிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், 'கழகச் செயல் தலைவர் பதவியை உருவாக்கியவர் க. அன்பழகன், பல்வேறு காலகட்டங்களில் திறம்படக் கழகப் பணியினை மேற்கொண்டவர். கழக முன்னோடி' எனப் புகழாரம் சூட்டினார்.
ஸ்டாலின் உள்ளத்தில் பெரியார்
இதனையடுத்து, சுப. வீரபாண்டியன் பேசும்போது, சமூகநீதி கண்காணிப்புக் குழுவில் கொடுக்கப்பட்டிருந்த வரையறைகளைப் படிக்கும்போது ஸ்டாலினுக்குள் தாடி இல்லாத பெரியார் இருப்பதாகக் கூறினார்.
அதன் பிறகு, செய்தியாளரிடம் பேசிய சுப. வீரபாண்டியன், "க. அன்பழகன் அவருடைய பேச்சுத் திறமையால், எழுத்துத் திறமையால், நேர்மையால், கொள்கைப் பற்றால் என்றென்றும் வாழ்வார். சமூகநீதி குழுவில் கொடுக்கப்பட்டுள்ள வரையறைகளைப் படிக்கும்போதுதான் ஸ்டாலின் உள்ளத்தில் தாடி இல்லாத பெரியார் இருப்பது புரிந்தது.
சமூக நீதிக்காகப் பாடுபடுவேன்
பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் என்று மட்டும் சொல்லாமல் அந்நாளைச் சமூகநீதி நாளாக அறிவித்து அன்று அரசுப் பணியாளர்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காமல் அனைவரும் அலுவலகம், பள்ளிக்கு வந்து கைகளை நீட்டி சமூக நீதிக்காகப் பாடுபடுவேன் என உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.
மு.க. ஸ்டாலின் பெரியாரின் கருத்துகளை யாருக்கும் வலிக்காமல் மிகவும் மென்மையாக மக்களிடம் எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: CM MK Stalin in Thanjavur: தஞ்சாவூரில் 134 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்