சென்னை: கரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து, மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையைத் தவிர்க்கவும், இடைநிற்றலைத் தடுக்கும் பொருட்டும் பள்ளிக் கல்வித் துறைப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக; தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாரக்கடைசியில் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலமாக பள்ளிக்கு வராத மாணவர் குறித்த தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
மாணவர்கள் பள்ளிக்கு வருவதாகக் கூறிவிட்டு, வெளியில் செல்வதைத் தடுக்கும் பொருட்டும், தொடர்ந்து கல்வி கற்பிக்கும் வகையிலும் மாணவர்களின் பெற்றோருக்கு வருகைப் பதிவு தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீட் யாருக்கானது? - புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டும் ஏ.கே. ராஜனின் அறிக்கை