சென்னை: கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி அரசு பேருந்துகளில் பயணிகள் இடைவெளி விட்டு பயணம் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக, அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது; அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும் எனக் காவல்துறைக்கு அறிவுறுத்திக் கண்காணித்து வருகிறது.
மாணவர்களின் விபரீத விளையாட்டு
இந்த நிலையில் நேற்று சைதாப்பேட்டையிலிருந்து வெள்ளவேடு செல்லும் அரசு பேருந்தில் பூந்தமல்லியில் உள்ள அரசு அறிஞர் அண்ணா பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர், கல்லறை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மேற்கூரையில் மீது ஏறினர்.
பேருந்தின் மேலே அமர்ந்து கொண்டு 'அறிஞர் அண்ணாவுக்கு ஜெ' எனக் கூறி கோஷமிட்டனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இதையும் படிங்க: தேசிய திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்