ETV Bharat / city

மாதவிடாய் காரணமாக ‌ 25% மாணவிகள் கல்வியை தொடர முடிவதில்லை - ஆய்வில் அதிர்ச்சி

author img

By

Published : Oct 16, 2022, 2:33 AM IST

25 சதவீத பெண் குழந்தைகள் மாதவிடாய் காரணத்தினால் பள்ளிக்கு செல்லாமல் இருக்கின்றனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.

மாதவிடாய் காரணமாக ‌ 25% மாணவர்கள் கல்வியை தொடர முடிவதில்லை - ஆய்வில் அதிர்ச்சி

சென்னை: தற்போதைய காலகட்டத்தில் மாதவிடாயை எதிர்கொள்ள சானிடரி நாப்கின், மாதவிடாய் கப் என பல்வேறு வழிகள் வந்து வந்துவிட்டது. ஆனால் இன்னும் பல்வேறு மாநிலங்களில் மாதவிடாயின் போது துணியை பயப்படுத்திக்கின்றனர்.

சமீபத்தில் தேசிய குடும்ப நலன் நடத்திய ஆய்வில் கிட்டத்தட்ட 15-19 வயது பெண்கள் 50% சதவீத பேர் மாதவிடாய் பருவத்தில் சுகாதாரமற்ற முறையில் துணிகளை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது. அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 69.4 சதவீதம் பேரும், பீகாரில் 67.5 சதவீதம் பேரும், குஜராத்தில் 51.5 சதவீதம் பேரும் துணியை பயன்படுத்துகின்றனர்.

குறைந்தபட்டமாக சண்டிகரில் 10.7 சதவீதமும், மிசோரமில் 11.1 சதவீதமும் தமிழ்நாட்டில் 12.7 சதவீதமும் துணிகளை பயன்படுத்துகின்றனர். இந்த மாதவிடாய் காலத்தில் பெரிதளவு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், பள்ளிகளில் சுகாதாரமான கழிவறை இல்லாத காரணத்தினால் மாதவிடாய் காலத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பயந்து விடுமுறை எடுத்துக்கொள்கின்றனர்.

தொடந்து இதுபோன்று விடுமுறை எடுப்பது மூலம் சில குழந்தைகள் பள்ளிவிட்டு நின்று விடுகின்றனர். பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கும் மாதவிடாய் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்பட்டதால், தற்போது மாதவிடாய் காலத்தை மாணவர்கள் பாதுகாப்பகவும் சுகாதாரமாக மாதவிடாயை கடந்து விடுகின்றனர் என தேசிய குடும்ப நலம் 2015 -16 ஆம் ஆண்டு மற்றும் 2019-20 ஆம் ஆண்டில் செய்த ஆய்வை ஒப்பிட்டு பார்ப்பதில் தெரியவந்துள்ளது.

மாதவிடாய் காரணமாக ‌ 25% மாணவர்கள் கல்வியை தொடர முடிவதில்லை

மாதவிடாய் காலத்தில் சுகாதாரமாக கடக்கும் சதவீதம், 2015 -16 ஆம் ஆண்டில் 57.6 இருந்தது ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் 77.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பாகவும் சுகாதாரமாக முறையை பின்பற்றும் பெண்கள் சதவீதம், 2015 -16 ஆம் ஆண்டில் 91 ஆக இருந்தது ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் 98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க, இந்த மாதவிடாய் காரணமாக இந்தியாவில் கிட்டத்தட்ட 25% குழந்தைகள் பள்ளிக்கு போகாமல் இடையில் நின்று விடுகின்றனர் என CRY அமைப்பின் தென்னிந்திய பகுதி வளர்ச்சி திட்ட துரையின் இணை பொது மேலாளர் ஹாரி ஜெயகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "தற்போது கிட்டத்தட்ட 52% குழந்தைகள் இன்னும் மாதவிடாய் என்றால் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள். இதில் 49 சதவீத பெண் குழந்தைகள் இன்னும் துணியை பயன்படுத்துகின்றனர் இதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

மாதவிடாயின் போது பெண் குழந்தைகளுக்கு வயிற்று வலி, உடம்பு வலி இருக்கும் அது மட்டுமில்லாமல் பள்ளிக்கூட போகும் வழியில் கரை பட்டு விடுமோ என்றும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்களோ என்ற எண்ணத்திலும், தீட்டு என்று ஒதுக்கி விடுவார்களோ என்று எண்ணி பள்ளிக்கூடத்திற்கு போகாமல் இருக்கின்றனர்.

அதை மீறி பள்ளிக்கூடத்துக்கு சென்றாலும் பள்ளிக்கூடத்தில் சுகாதாரமான கழிவறை, அவர்களுக்கு தேவையான சானிட்டரி நாப்கின் முதலியவை இருக்க வேண்டும். இதையெல்லாம் இல்லாத பட்சத்தில் அவர்கள் விடுமுறை எடுத்துக்கொள்கின்றனர். தொடர்ந்து விடுமுறை எடுப்பதால் அவர்கள் பள்ளியை விட்டு நின்றுவிடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் குழந்தை தொழிலாளிகள் அல்லது குழந்தை திருமணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

25 சதவீத பெண் குழந்தைகள் மாதவிடாய் காரணத்தினால் பள்ளிக்கு செல்லாமல் இருக்கின்றனர். 12-18 வயது உடையவர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாதவிடாய் பற்றி சமூகத்தில் சாதாரணமாக பேச வேண்டும், விழிப்புணர்வு தேவை. மேலும் இந்த குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டும்.

கிராமப்புற நகர்ப்புறம் என்று பிரிக்க முடியாது அனைத்து இடங்களிலும் இதுபோன்று தான் நடைபெற்ற வருகிறது. எனவே இதைப் பற்றி பெரிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தற்போது நாங்கள் 500 கிராமங்களுக்கு சென்று பெற்றோர்களுக்கு ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கும் இதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்" என தெரிவித்தார்.

இது ஒருபக்கம் இருந்தாலும் மாதவிடாய் காரணமாக மாநில அளவு அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட கடுமையாக உள்ளது என தேசிய கால்பந்து வீராங்கனை பீமா பாய் தெரிவிக்கிறார், இது குறித்து பேசிய அவர்,"11 வயது முதல் கால்பந்து விளையாடி வருகிறேன். நான் இதுவரை நேஷனல் அளவில் விளையாடியிருக்கிறேன்.

மாதவிடாய் காலத்தின் போது விளையாட்டுக்கு அனுமதிக்க வேண்டாம் என தாத்தா பாட்டி தெரிவிக்கின்றனர். இது போன்று தொடர்ந்து நடைபெறும் பொழுது அவர்கள் அந்த விளையாட்டை விட்டு சென்று விடுகின்றனர். வெளியிடங்கள் அல்லது வெளி மாநிலங்களில் விளையாட செல்லும் பொழுது அங்கு சரியான வசதி இருக்காது சானிடரி நேப்கின் மாற்றுவதற்கான இடம் கூட சில இடங்களில் இருக்காது, இது போன்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்.

பெற்றோர்கள் மற்றும் சமூகம் பெண்களுக்கு வருகின்ற சாதாரண ஒரு விஷயம் மாதவிடாய் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் இதைப் பற்றி அதிக விழிப்புணர்வு தேவை" என தெரிவித்தார். மாதவிடாய் தீட்டு என்று எடுத்துக்கொள்ளாமல் சாதாரணமான விஷயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: அதிர்ச்சி: மாதவிடாய் கறைக்கு அபராதம் விதித்த ஹோட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.