ETV Bharat / sports

கேப்டன் பதவியை 2வது முறையாக துறந்த பாபர் அசாம்! இந்த முறை என்னக் காரணம்? - Babar Azam resigns captaincy - BABAR AZAM RESIGNS CAPTAINCY

Babar Azam Resign Captaincy: பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து இரண்டாவது முறையாக பாபர் அசாம் விலகி உள்ளார்.

Etv Bharat
Babar Azam (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 2, 2024, 11:16 AM IST

ஐதராபாத்: பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். வேலைப்பளுவை கையாளவும் அணிக்கு ஒரு வீரராக கூடுதல் பங்களிப்பு வழங்கும் நோக்கிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து பாபர் அசாம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 10 வரிசையில் வரிசையில் இருந்த பாபர் அசாம் அண்மைக் காலமாக தொடர் சொதப்பல்கள் காரணமாக இறங்கு முகத்தை எதிர்கொண்டார்.

பாகிஸ்தானின் வீழ்ச்சி வரலாறு:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதை அடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார். தொடர்ந்து ஷாகீன் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாபர் அசாம் மீண்டும் பாகிஸ்தான் ஒருநாள் மட்டும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர், அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் என பாகிஸ்தான் அணி தொடர்ந்து சொதப்பி வந்தது.

ஓராண்டில் பாகிஸ்தான் கண்ட கேப்டன்கள்:

இதனால் கேப்டனாக பாபர் அசாமுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வியை தழுவி வெளியேறியதை அடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார். இந்நிலையில், தற்போது ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் பாபர் அசாம் விலகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒராண்டு இடைவெளியில் பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து இரண்டு முறை விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வடிவிலான கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார். அதையடுத்து ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாகவும், ஷாகீன் அப்ரிடி டி20 கேப்டனாகவும் பொறுப்பேற்றனர்.

கடந்த மார்ச் மாதம் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ஷாகீன் அப்ரிடி விலகியதை அடுத்து ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்தார். பாபர் அசாம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இரண்டாவது முறையாக பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகி உள்ளார்.

இதையும் படிங்க: அரசு வேலையை விட எளிதில் கிடைக்கும் கிரிக்கெட் அம்பயர் பணி! கோடிகளில் சம்பளம்! என்னென்ன வசதி தெரியுமா? - How to become a cricket umpire

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.