சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் சுமார் 71 ஆயிரத்து 934 இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை: வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்ட அவர், இதனை சரி செய்ய மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில் பாடத்திட்டத்தினை மாற்ற தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Co-edக்கு பச்சைக்கொடி காட்டிய அமைச்சர்: மேலும் ஆண்கள் - பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை எனக் கூறிய அவர், சுயநிதி கல்லூரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களின் அனுமதியுடன் தான் செயல்பட முடியும் என்றும் பேசினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு தனியாக விளையாட்டு மைதானம் கேட்ட ஓபிஎஸ்