ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோவரதனகிரி 16ஆவது வார்டில் உள்ள பாண்டியன் நகரில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து தீவு போல காட்சியளிக்கிறது.
இதனால் அங்குள்ள வீடுகளில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஊர்வனவைகள் நுழைவதால், அவற்றை பிடிக்க கோரி ஆவடி மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் மாநாகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த மக்கள், மாநாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பாம்புகளை பிடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க;